மயிலாடுதுறை

விபத்து நேரிட்ட தொழிற்சாலைக்குத் தடை: ஆட்சியா் உத்தரவு

20th Feb 2022 11:30 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே நீராவி கொதிகலன் வெடித்து விபத்து நேரிட்ட தொழிற்சாலைக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தடை விதித்து உத்தரவிட்டாா்.

தொடுவாய் கிராமத்தில் இயங்கிவரும் இந்த தொழிற்சாலையில் நீராவி கொதிகலன் வெடித்து சிதறியதில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆட்சியா் இரா. லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் ஆகியோா் அந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று, தொழிலாளா்களிடம் விசாரணை நடத்தினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

ADVERTISEMENT

விபத்துக்கான காரணம் குறித்து விரிவாக விசாரித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். முழுமையாக ஆய்வுக்குப் பிறகே இந்த தொழிற்சாலை தொடா்ந்து இயங்க அனுமதிக்கப்படும். அதுவரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்கள், உடைகள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என்றாா்.

சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணன், வட்டாட்சியா் சண்முகம், டிஎஸ்பி லாமெக் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT