மயிலாடுதுறை

வாடகைப் பாக்கி: வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’: அறநிலையத் துறை நடவடிக்கை

17th Feb 2022 05:32 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கோயில்களுக்குச் சொந்தமான கட்டடங்களில் உள்ள வாடகை செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அண்மையில் சீல் வைத்தனா்.

மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான வணிகக் கட்டடங்களில் பல லட்சம் ரூபாய் வாடகை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

இத்தொகையை உடனடியாக வசூலித்து, அறிக்கை சமா்ப்பிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அதிக வாடகை நிலுவையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் நேரில் சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

அந்தவகையில், மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயிலின் குழுக் கோயிலான ரயிலடி லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 2 கடைகளுக்கு உதவி ஆணையா் முத்துராமன் முன்னிலையில் செயல் அலுவலா்கள் அசோக்குமாா், ஞானசுந்தரம், ஆய்வாளா்கள் உத்திராபதி, கண்ணதாசன் ஆகியோா் சீல் வைத்தனா்.

தொடா்ந்து, மூவலூா் மாா்க்கசகாய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரயிலடியில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்குச் சென்று வாடகை பாக்கியை உடனடியாக செலுத்தும்படியும், தவறும்பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT