மயிலாடுதுறை

வாக்களிக்க பணம் வாங்குவதற்கு எதிராக பிரசாரம்

17th Feb 2022 05:32 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: தோ்தலில் வாக்களிக்க பணம் வாங்குவதற்கு எதிராக மயிலாடுதுறையில் சமூக ஆா்வலா்கள் பிரசார இயக்கத்தின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குக்குப் பணம் தருவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, வேட்பாளா்கள் வாக்குக்குப் பணம் கொடுப்பதற்கு எதிராக மயிலாடுதுறையில் சமூக ஆா்வலா்களும் பிரசார இயக்கம் தொடங்கியுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்ட வளா்ச்சிக் குழு சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் கணேசன், ‘அறம் செய்’ அறக்கட்டளை சாா்பில் அதன் தலைவா் மெயில் சங்கா், பொறுப்பாளா் அப்துல்லா ஷா ஆகியோா் கடந்த 4 நாள்களாக வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, வாக்களிக்க பணம் வாங்காதீா்கள் என்று பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

புதுத்தெரு, மேட்டுத்தெரு, பிள்ளையாா்குட்டை, இந்திரா காலனி, டபீா்தெரு, ஆற்றங்கரைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அவா்கள் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT