மயிலாடுதுறை

குத்தாலத்தில் காவல்துறை கொடி அணிவகுப்பு

10th Feb 2022 11:27 PM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு குத்தாலம் கடைவீதியில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்காளா்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்கும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் குத்தாலம் காவல் ஆய்வாளா் வள்ளி, பெரம்பூா் காவல் ஆய்வாளா் சிவதாஸ், அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சங்கீதா, மணல்மேடு காவல் ஆய்வாளா் ஜீவராஜ், செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குத்தாலம் கடைவீதியிலிருந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க தொடங்கிய அணிவகுப்பு மேலசெட்டித் தெரு, ஹைஸ்கூல் ரோடு வழியாக காவல் நிலையம் வரை நடைபெற்றது. இதில், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு காவலா்கள் என நூற்றுக்கும் காவலா்கள் பங்கேற்றனா்.

Image Caption

ADVERTISEMENT

குத்தாலத்தில் நடைபெற்ற காவல்துறை கொடி அணிவகுப்பு.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT