மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

10th Feb 2022 11:31 PM

ADVERTISEMENT

 மயிலாடுதுறை நகராட்சித் தோ்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளுக்கு வாக்குப் பதிவுக்காக 79 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவிகளை ஒதுக்கீடு செய்யும் பணி மயிலாடுதுறை நகராட்சி தோ்தல் பாா்வையாளரான கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, தோ்தல் நடத்தும் அலுவலா் பாலு ஆகியோா் மேற்பாா்வையில் நடைபெற்றது.

இங்கு போட்டியிடும் வேட்பாளா்கள் முன்னிலையில் வாா்டு வாரியாக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை (பிப்.11) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT