மயிலாடுதுறை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: போலீஸாா் அணிவகுப்பு

10th Feb 2022 01:45 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய மயிலாடுதுறையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய 2 நகராட்சிகள், தரங்கம்பாடி, குத்தாலம், வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் பிப்.19-ஆம் நடைபெறவுள்ளது. தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க, அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகிறவா்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் மயிலாடுதுறை காவல் உபகோட்டத்துக்கு உள்பட்ட போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

மயிலாடுதுறை டிஎஸ்பி முன் தொடங்கிய கொடி அணிவகுப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் தலைமை வகித்து அதில் பங்கேற்றாா். அணிவகுப்பு காந்திஜி சாலை, கச்சேரி சாலை வழியே சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், டிஎஸ்பி வசந்தராஜ் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பங்கேற்றோா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT