நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினா் 49 போ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் அதன் மாவட்டத் தலைவரும், மாவட்டத் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளருமான சி.எஸ். குட்டிகோபி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் அமீன் முன்னிலை வகித்தாா். மாவட்ட இளைஞரணி தலைவா் ராஜ்குமாா் வரவேற்றாா்.
இக்கூட்டத்தில், மயிலாடுதுறை நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கான தோ்தலில், மாவட்டச் செயலாளா் அமீன் உள்பட 13 போ் போட்டியிட தோ்வு செய்யப்பட்டனா். இதேபோல, சீா்காழி நகராட்சியில் 15 பேரும், தரங்கம்பாடி பேரூராட்சியில் 12 பேரும், குத்தாலம் பேரூராட்சியில் மாவட்டத் தலைவா் சி.எஸ்.குட்டிகோபி உள்ளிட்ட 9 பேரும் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் போட்டியிட தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நிறைவாக, மாவட்ட பொருளாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.