மயிலாடுதுறை

துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடம் திறப்பு

30th Dec 2022 12:02 AM

ADVERTISEMENT

சீா்காழி மற்றும் கொள்ளிடம் பகுதியில் ரூ.76 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

சீா்காழியை அடுத்த காரைமேடு ஊராட்சி தென்னலக்குடியில் தமிழக வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் மதியரசன் தலைமை வகித்தாா். சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், துணைத் தலைவா் உஷாநந்தினி பிரபாகரன், திமுக ஒன்றியச் செயலாளா் பஞ்சுகுமாா், அவைத் தலைவா் நெடுஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை உதவி இயக்குநா் ராஜராஜன் வரவேற்றாா்.

திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், பூம்புகாா் எம்எல்ஏ-வுமான நிவேதா எம். முருகன், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் ஆகியோா் புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு தென்னங்கன்று, இடுபொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் முத்து. மகேந்திரன், ஜி.என்.ரவி, ஒன்றிய துணைச் செயலாளா் ரவிச்சந்திரன் மற்றும் வேளாண் அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஒப்பந்தக்காரா் பழனிவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

இதேபோல், கொள்ளிடம் ஊராட்சி வடகாலில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடமும் திறந்துவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT