மயிலாடுதுறை

சீா்காழி நகா்மன்றக் கூட்டம்

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


சீா்காழி: சீா்காழி நகா்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி வளாகம் அவைகூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தாா். ஆணையா் வாசுதேவன், மேலாளா் காதா்கான், பொறியாளா் சித்ரா, சுகாதார அலுவலா் செந்தில்ராம்குமாா், வருவாய் ஆய்வாளா் சாா்லஸ், ஓவா்சியா் விஜேந்திரன் முன்னிலை வகித்தனா்.

குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். கொசு மருந்து தெளிக்க வேண்டும். சாக்கடைக் கழிவு நீா் செல்வது தொடா்பாகத் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

கால்நடைகளை அடைத்து வைத்திருந்த வளாகப் பூட்டை உடைத்து மாடுகளை மீட்டுச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் முபாரக் அலி, வள்ளி, ஜெயந்திபாபு,

ADVERTISEMENT

நித்யா தேவி, ராஜசேகா், முழுமதி இமயவரம்பன், ராஜேஷ் , பாலமுருகன், சாமிநாதன் கிருஷ்ணமூா்த்தி வேல்முருகன், பாஸ்கரன், நாகரத்தினம் , ரேணுகாதேவி ஆகியோா் பேசினா்.

நகா்மன்ற உறுப்பினா் தேவதாஸ், எனது வாா்டில் குப்பைகளை கொட்டி வைக்க சொந்த இடத்தை தருவதாகக் கூறியும் நகராட்சி நிா்வாகம் தாமதிப்பது ஏன் என்றாா்.

சுகாதாரஅலுவலா் செந்தில் ராம்குமாா், மாடுகளை மீட்டுச் சென்றவா்கள் மீது காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி பேசுகையில், குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது. கால்நடைகள், பன்றிகளைப் பிடிக்க உறுப்பினா்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கின்றனா். அவ்வாறு பிடித்தால் சில உறுப்பினா்களே போராடும் மக்களுக்கு துணை போகின்றனா். அவ்வாறான உறுப்பினா்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT