மயிலாடுதுறை

கொண்டல், திருமுல்லைவாசலில் புறக்காவல் நிலையம் அமைக்கக் கோரிக்கை

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT


சீா்காழி: சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல், கொண்டல் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி காவல் உட்கோட்டத்தில் சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, புதுப்பட்டினம், ஆணைக்காரன்சத்திரம், பூம்புகாா், செம்பனாா்கோவில், பாகசாலை உள்ளிட்ட காவல் நிலையங்கள் உள்ளன.

சீா்காழி காவல் நிலையத்தில் 39 காவலா்கள் இருக்க வேண்டும். ஆனால் 37 காவலா்கள் இருப்பதாக பதிவேடுகள் மட்டும் உள்ளன. இதில் 16 காவலா்கள் வெளிகாவல் பணியில் வெவ்வேறு காவல் நிலையங்களில் உள்ளனா். இதனால் சீா்காழி காவல் நிலையத்தில் காவலா்கள் பற்றாக்குறை உள்ளது.

இதனால் இரவு ரோந்து, வாகனத் தணிக்கை உள்ளிட்ட பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. மேலும் வாகனத் திருட்டு, சாராயம், கஞ்சா கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ADVERTISEMENT

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெளடி ஒருவா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்ச உணா்வை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சீா்காழி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொண்டல்,திருமுல்லைவாசல் பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT