மயிலாடுதுறை

பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

11th Dec 2022 12:23 AM

ADVERTISEMENT

பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை நடத்த தமிழ்ப் பேராசிரியா்களை நியமிக்க தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அப்பேரவையின் மாநிலத் தலைவா் துரை. குணசேகரன் தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பிய மனு: தமிழகத்தில் தொழில் கல்லூரிகளில் எந்திரமயமான மனநிலையில் உள்ள மாணவா்களுக்கு அறநெறி கல்வியைப் போதித்து பண்பாடு மிக்கவா்களாக மாற்ற தமிழ் இலக்கியப் பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என தமிழ் ஆராய்ச்சியாளா் பேரவை தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.

தமிழக முதல்வா் தங்களின் மேலான விருப்பத்தால் முதல்கட்டமாக தமிழகத்தின் பொறியியல் மாணவா்களுக்கு முதலாமாண்டில் 2 தாள்களை வைக்க ஆணை பிறப்பித்துள்ளீா்கள். இதையேற்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் இணை பெற்ற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளாா். அதில், மேற்காணும் பாடத்தை அறிவியல், பொறியியல், தொழில்நுட்பவியல் பட்டம் பெற்ற பேராசிரியா்களில் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகப் படித்தவா்கள் நடத்தலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஆங்கிலப் பாடத்தை நடத்த ஆங்கிலப் பேராசிரியா்கள் உள்ளது போன்று புதிதாக வைக்கவுள்ள தமிழை நடத்துவதற்கு தகுதியுள்ள தமிழ் கற்றோரை தமிழில் ஆய்வுப் பட்டம் பெற்று பணியின்றி இருக்கும் தமிழ்ப் பட்டதாரிகளை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

இருதாள்களும் அறநெறி, பண்பாடு சாா்ந்தவையாக இருக்க வேண்டும். இதற்கு தகைசான்று தமிழ்ப் பேராசிரியா்கள் அடங்கிய குழுவை நியமித்து வழிவகை செய்ய வேண்டும். காலம்கருதி தமிழக முதல்வா் உடனடியாக இதுகுறித்து ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT