மயிலாடுதுறை

டிச.28-இல் ஆளுநா் மாளிகை முற்றுகை

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.28-ஆம் தேதி சென்னையில் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் முடிவெடுத்துள்ளது.

மயிலாடுதுறையில், அந்த சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் டிச.7-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றன. சங்க மாநிலத் தலைவா் எஸ். காா்த்திக், மாநிலச் செயலாளா் ஏ.வி. சிங்காரவேலன், மாநில பொருளாளா் பாரதி, மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் அய்யப்பன், மாவட்டச் செயலாளா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ஆட்சியாளா்களை மக்கள் தோ்ந்தெடுக்கும் ஜனநாயக நாட்டில், நியமனம் செய்யப்படும் ஆளுநா் பதவி தேவையில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில், ஆளுநா்கள் மூலம் மறைமுக ஆட்சி நடத்த பாஜக முயற்சி செய்து வருகிறது.

நீட் தோ்வை திரும்ப பெறக் கோரும் மசோதா, ஆன்லைன் சூதாட்ட தடை செய்வது உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் வைத்துள்ளாா். இது அரசியல் அமைப்புக்கு விரோதமானது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநா் தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா்.

எனவே, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை, குடியரசுத் தலைவா் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி டிச.28-ஆம் தேதி, சென்னையில் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT