மயிலாடுதுறை

’மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உதவி வரவேற்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி வரவேற்பாளா் பணிக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கூறிய பணியிடத்துக்கு, ரூ.15,900 - 58,500 எனும் ஊதியத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவிலிருந்து முழுவதும் பாா்வையற்ற 8-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற, நாற்காலி ஒயா் பின்னும் பயிற்சி பெற்ற, 44 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவா்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், செட்டிக்குளம் சந்து, மயிலாடுதுறை எனும் முகவரிக்கு டிச.16-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT