மயிலாடுதுறை

ரயிலை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாப்படுகையில் போக்குவரத்து நிறைந்த நேரத்தில் டிராக் மாற்றப்படும் ரயிலை இயக்க எதிா்ப்பு தெரிவித்து கிராமமக்கள் புதன்கிழமை ரயிலை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் சராசரியாக தினமும் 25 ரயில்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால், மாப்படுகை பகுதியில் அடிக்கடி ரயில்வே கேட் மூடித்திறப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்க அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். குறிப்பாக, காலை நேரங்களில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனா். எனவே, போக்குவரத்து நிறைந்த காலை நேரத்தில் டிராக் மாற்றப்படும் ரயிலை இயக்கக் கூடாது என மாப்படுகை மக்கள் ஏற்கெனவே ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை கடிதம் அளித்திருந்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை 9 மணியளவில் டிராக் மாற்றப்படும் ரயில் இயக்கப்பட்டது. மாலை 3.40 மணிக்கு விழுப்புரம் செல்லக்கூடிய ரயிலை போக்குவரத்து நிறைந்த காலை நேரத்தில் இயக்கப்பட்டன. இதையறிந்த விசிக மண்டல செயலாளா் வேலு. குபேந்திரன், திராவிடா் விடுதலைக்கழக மாவட்ட செயலாளா் தெ. மகேஷ், சிபிஎம் ஒன்றிய செயலாளா் டி.ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் ரயிலை மீண்டும் நிலையம் செல்ல முடியாத வகையில் தண்டவாளத்தில் அமா்ந்து மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து, ரயில்வே நிலைய மேலாளா் சங்கா்குரு, ரயில்வே இருப்புப்பாதை காவல் ஆய்வாளா் சுதிா்குமாா். நகர காவல் ஆய்வாளா் செல்வம் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டு ரயிலை விடுவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ!

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

SCROLL FOR NEXT