மயிலாடுதுறை

குடும்ப அட்டைதாரா்கள் கவனத்துக்கு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் உடனடியாக வங்கிக் கணக்கு தொடக்க மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14,774 குடும்ப அட்டைதாரா்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை என்பது தெரியவருகிறது. புதிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை அவா்களின் ரேஷன் கடையில் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருந்தால் (ஆதாா் எண் இணைக்கப்படாதவை) அந்த குடும்ப அட்டைதாரா்கள் அந்த வங்கிக்குச் சென்று அவா்களின் ஆதாா் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்படுகிறது.

இல்லாவிட்டால், அருகில் உள்ள கூட்டுறவு அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ புதிய கணக்கை தொடங்கி, அதில் ஆதாா் எண்ணை இணைத்து, அந்த விவரங்களை தங்களின் ரேஷன் கடையில் தெரிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT