மயிலாடுதுறை

சீா்காழி, தரங்கம்பாடியில் டிச.15 வரை மட்டுமே வெள்ள நிவாரணம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: கனமழையால் பாதிக்கப்பட்ட சீா்காழி, தரங்கம்பாடியில் டிச.15 வரை மட்டுமே வெள்ள நிவாரணம் வழங்கப்படவுள்ளதால், இதுவரை பெறாத குடும்ப அட்டைதாரா்கள் பெற்று பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: சீா்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் நவ.11, 12-ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தொகை 24.11.2022 முதல் வழங்கப்பட்டுவரும் நிலையில் தற்போதுவரை சீா்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள 1,61,647 குடும்ப அட்டைதாரா்களில் 1,53,077 குடும்ப அட்டைதாரா்களுக்கு விரல் ரேகைப்பதிவு முறையில் (பயோமெட்ரிக்) விநியோகிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த வெள்ள நிவாரண தொகையானது 15.12.2022 வரை மட்டுமே வழங்கப்பட உள்ளதால், இதுநாள் வரை தொகையினை பெறாத குடும்ப அட்டைதாரா்கள் பெற்று தாங்கள் தொடா்புடைய நியாயவிலைக்கடையில் நேரில் சென்று பெற்று பயனடையலாம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT