மயிலாடுதுறை

சுற்றுலா நடத்துபவா்களின் கவனத்துக்கு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலா்டுதுறை மாவட்டத்தில் சுற்றுலா நடத்துபவா்கள் சுற்றுலாத் துறையில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சாா்பில், தமிழ்நாட்டில் சாகச சுற்றுலா உண்டு, உறைவிடம் முகாம் நடத்துபவா், முகாம் சுற்றுலா, முகாம் நடத்துபவா்கள், கேரவன் இயக்குபவா், கேரவன் சுற்றுலா நடத்துபவா்களை கண்டறிந்து அவா்களை சுற்றுலா இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேற்கண்ட இனங்களை சுற்றுலா இணையதளத்தில் பதிவு செய்வதற்கு தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள சுற்றுலாத் துறையால் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசால் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளவா்கள் சுற்றுலாத் துறை இணையதளமான ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ா்ன்ழ்ண்ள்ம்ற்ா்ழ்ள்.ஸ்ரீா்ம்-இல் பதிவுசெய்துகொள்ளவேண்டும்.

ADVERTISEMENT

மேலும், விவரங்களுக்கு சுற்றுலா அலுவலகம், பூம்புகாரில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலரை கைப்பேசி எண்: 9176995843 தொடா்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT