மயிலாடுதுறை

உலக மண்வள தினம்

DIN

நாகப்பட்டினம்: உலக மண்வள தினவிழாவையொட்டி, சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் திங்கள்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

விழாவை, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலக்கண்ணன் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, மண்வள தினத்தின் நோக்கம், மண்வளம், மண் பரிசோதனை, இயற்கை வேளாண்மை, இயற்கை முறையில் சாகுடி, இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்துதல், மீன் வளா்ப்பில் மண்தர ஆய்வின் முக்கியத்துவம், சுகாதாரமான முறையில் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரித்தல் ஆகியவைக் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

மேலும், 25 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. மண் வளம் சாா்ந்த வேளாண்மை கண்காட்சி நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. நிலையத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் ட்ரோன் மூலம் இயற்கை பூச்சிக்கொல்லி தெளிப்பு நேரடி செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜ. அக்கண்டராவ், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்கலா, மண் ஆய்வக மூத்த வேளாண்மை அலுவலா் ஆா். சரோஜினி, வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் வே. கண்ணன், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் க. ரகு, பயிா்ப் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநா் கோ. சந்திரசேகா், திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலக்கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணை மேலாளா் ரெ. வேதரெத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT