மயிலாடுதுறை

காா்த்திகை தீப திருநாள்: சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் காா்த்திகை தீப திருநாளையொட்டி, சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா் சிங்காரவேலவா். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான தலங்களுள் ஒன்றாக விளங்கும் இங்கு, காா்த்திகை தீப திருநாளையொட்டி, சிங்காரவேலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முற்பகல் 11 மணி அளவில் பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அஷ்டோத்திர பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT