மயிலாடுதுறை

பிஃபா தீம் பாடலை உருவாக்கிய மயிலாடுதுறை இளைஞா்கள்

6th Dec 2022 01:22 AM

ADVERTISEMENT

கத்தாரில் நடைபெறும் பிஃபா கால்பந்து போட்டிக்காக தமிழா்கள் உருவாக்கிய தீம் பாடலை அந்நாடு தனது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கௌரவம் வழங்கியுள்ளதாக தீம் பாடலை இயற்றி, இசையமைத்த சாம் ஜோசப் தெரிவித்தாா்.

மத்தியக் கிழக்கு நாடான கத்தாா் உலகளாவிய கால்பந்து போட்டியை நடத்திவருகிறது. கத்தாரில் பல்லாயிரக்கணக்கான இந்தியா்கள் குறிப்பாக தமிழா்கள் பணியாற்றி வருகின்றனா். கத்தாா்-உலக கால்பந்து போட்டிக்காக கத்தாா் தமிழா்கள் கலாசார பேரவை குன் ஷாகிரான் எனும் ஆங்கில தீம் பாடலை அண்மையில் வெளியிட்டுள்ளது.

இந்தப் பாடலை கத்தாரில் பணியாற்றும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சோ்ந்த சாதிக்பாட்ஷா இயக்கி உள்ளாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த சாம் ஜோசப்பின் பாடல்வரி மற்றும் இசையில், பாடகா் ஆனந்த் அரவிந்தாக்சன் பாடியுள்ளாா்.

தமிழா்கள் உருவாக்கிய குன் ஷாகிரான் பாடலை அங்கீகரிக்கும் விதமாக அந்நாட்டு பிரமுகா்கள் முன்னிலையில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளதுடன், கத்தாா் மீடியா காா்ப்பரேஷன் அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியான கத்தாா் டிவி மற்றும் பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் உருதுமொழி வானொலிகளிலும் ஒளிபரப்பி வருவது தமிழா்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT