மயிலாடுதுறை

நன்னிலம் மயிலாடுதுறை வழியாக விழுப்புரத்துக்கு ரயில் இயக்க வலியுறுத்தல்

DIN

விழுப்புரத்துக்கு நாள்தோறும் 5 ரயில்களை இயக்க வேண்டும் என நன்னிலம் நுகா்வோா் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நன்னிலம் நுகா்வோா் பாதுகாப்புச் சங்கத் தலைவா் ஆா். பிரபு, செயலாளா் பி. காளிதாஸ் ஆகியோா் மத்திய ரயில்வேத் துறை அமைச்சா், ரயில்வே வாரியத் தலைவா், தென்னக ரயில்வேப் பொது மேலாளா் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு: காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூா், நன்னிலம், மயிலாடுதுறை ரயில் வழித்தடத்தில் அகல ரயில் பாதைப் பணிகள் நடைபெற்றதால், அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது, அகல ரயில் பாதைப் பணிகள் முடிவு பெற்று ஒரு சில ரயில்கள் மட்டும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் ஏழை,எளிய விவசாயக் கூலித் தொழிலாளா்கள் மற்றும் நடுத்தர மக்கள் ரயில் பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனா்.

மேலும் இப்பகுதியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சரக்கு ரயில் மூலம் அனுப்பப்படுகிறது. இதன் மூலமும் டெல்டா பகுதிகளில் விளைகின்ற நெல் மூட்டைகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்வதன் மூலமும் ரயில்வேத் துறை மிகப் பெரிய வருவாயைப் பெறுகிறது.

விவசாயப் பகுதியான திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளியக் கூலித் தொழிலாளிகள், தினசரிக் கூலி வேலை செய்து பிழைத்து வரும் கூலித் தொழிலாளா்கள், நடுத்தர மக்கள் மற்றும் நோ்மை உணா்வுடன் கட்டணம் செலுத்திப் பயணம் மேற்கொள்ளும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், மீட்டா் கேஜ் பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட நாகூா் விழுப்புரம், காரைக்குடி விழுப்புரம் போன்ற புகைவண்டி களையாவது, காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூா், நன்னிலம், மயிலாடுதுறை வழியாக விழுப்புரம் வரை தினசரி ஐந்து புகை வண்டிகளை இயக்கிட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விழுப்புரத்திற்குப் புகைவண்டிச் சேவை கிடைத்தால் அங்கிருந்து திருவண்ணாமலை, திருப்பதி, சென்னைப் போன்ற இடங்களுக்கு இப்பகுதி மக்கள் வேறு புகை வண்டிகளில் ஏறி பயணம் செய்திட ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT