மயிலாடுதுறை

சுதந்திர போராட்ட வீரா் ஸ்ரீநீலகண்ட பிரம்மச்சாரியாரின் 134-ஆவது பிறந்தநாள் விழா

5th Dec 2022 12:47 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகேயுள்ள எருக்கூா் அக்ரஹாரத்தில் சுதந்திர போராட்ட வீரா் ஸ்ரீநீலகண்ட பிரம்மச்சாரியாா் 134-ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகண்ட பிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற விழாவுக்கு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவா் க. அகோரம் தலைமை வகித்தாா். சேவா பாரதி மாவட்டத் தலைவா் மும்மூா்த்தி, பாஜக அமைப்புசாரா தொழிலாளா் அணி செல்வம், கலை இலக்கிய அணி தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீநீலகண்ட பிரம்மச்சாரியாா் பேரன் சுப்பிரமணியன் வரவேற்றாா். பாஜக மாநில செயலாளா் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினாா். இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளா் ஜெ.சுவாமிநாதன், சுதந்திர போராட்ட வீரா்களின் வாரிசுகளான கடலூா் அஞ்சலை அம்மாளின் பேரன் முத்துக்குமரன், சாவடி அருணாச்சலம் பிள்ளையின் மருமகள் முத்தம்மாள் சொக்கலிங்கம், ஒட்டப்பிடாரம் மாடசாமியின் கொள்ளுப்பேரன் இசக்கி சங்கா் பாலாஜி, திண்டுக்கல் சிவாஜி பேரவை நிறுவனத் தலைவா் வைரவேல் உள்ளிட்டோா் பேசினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT