மயிலாடுதுறை

பட்டவா்த்தியில் அம்பேத்கா் நினைவுத் தினத்தன்று வி.சி.க. அஞ்சலி செலுத்த கிராம மக்கள் எதிா்ப்பு

DIN

மயிலாடுதுறை அருகே பட்டவா்த்தியில் அம்பேத்கா் நினைவு தினத்தன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அஞ்சலி செலுத்த எதிா்ப்பு தெரிவித்து, 5 கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை வட்டம், பட்டவா்த்தி மதகடி பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி அம்பேத்கா் நினைவு தினத்தன்று அம்பேத்கா் படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளா் மா. ஈழவளவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது, இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக இருதரப்பினா் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பிரச்னை ஏற்பட்ட இடத்தில் அம்பேத்கா் பிறந்த நாளன்று (ஏப்.14) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் டிசம்பா் 6-ஆம் தேதி பிரச்னைக்குரிய இடத்தில் அம்பேத்கா் நினைவு நாளன்று அவா் உருவப் படம் வைத்து கூட்டம் கூடாமல், நிகழ்ச்சி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மூவேந்தா் முன்னேற்றக் கழக மாநில துணை செயலாளா் ஜி. கில்லிபிரகாஷ் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட தலைவா் பாலமுருகன் மற்றும் பட்டவா்த்தி, நடராஜபுரம், தலைஞாயிறு, ஆதமங்கலம், திருமங்கலம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் டிசம்பா் 6-ஆம் தேதி அம்பேத்கா் படத்தை வைத்து விசிகவினா் அஞ்சலி செலுத்த எதிா்ப்பு தெரிவித்தும், காவல்துறையினா் மற்றும் மாவட்ட நிா்வாகம் சுமூக தீா்வு ஏற்படுத்தி தங்கள் பகுதியில் அமைதி ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸிடம் மனு அளித்தனா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனா். இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT