மயிலாடுதுறை

கிராம உதவியாளா் பணிக்கு டிச.4-இல் எழுத்துத் தோ்வு

2nd Dec 2022 01:45 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய 4 வட்டங்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை 4 தோ்வு மையங்களில் முதற்கட்ட எழுத்துத்தோ்வு நடைபெற உள்ளது.

இத்தோ்வுக்கு, விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களுக்கு கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் இணையதள முகவரி அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இணையதள முகவரி வாயிலாக தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்தும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT