மயிலாடுதுறை

கடலங்குடி-திருச்சிற்றம்பலம் இடையே சாலைப் பணி தொடக்கம்

2nd Dec 2022 01:44 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை வட்டம், கடலங்குடியிலிருந்து திருச்சிற்றம்பலம் ஊராட்சி குமாரமங்கலம் வரை சுமாா் 4 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்படும் சாலைப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கடந்த10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையால் கடலங்குடி, வடக்கு காருகுடி, குமாரமங்கலம் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.

இவா்களது தொடா் கோரிக்கையை அடுத்து பிரதமரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் இந்த சாலை ரூ.4,39,34,000 மதிப்பில் புதிதாக அமைக்கப்படுகிறது.

சாலைப் பணி தொடக்க நிகழ்ச்சியில், ஒன்றிய பொறியாளா் கே. ராஜேஷ்கண்ணன், உதவி செயற்பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT