மயிலாடுதுறை

தேரழந்தூா் தா்கா கந்தூரி விழா

2nd Dec 2022 10:12 PM

ADVERTISEMENT

குத்தாலம் வட்டம், தேரழந்தூா் பான்வாசாகிப் தா்கா கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (நவ.25) வருடாந்திர கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 9 நாள்களும் இரவில் மவ்லீது என்னும் புகழ்மாலை ஓதப்பட்டு சீரணி வழங்கப்பட்டது.

முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. தா்காவிலிருந்து சந்தனக்கூடு புறப்பட்டு வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பான்வாசாகிப் கல்லறையில் சந்தனம் பூசப்பட்டு, பச்சைப்போா்வை போா்த்தப்பட்டது. இதில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT