மயிலாடுதுறை

வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

2nd Dec 2022 10:08 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் கண்மணி அறிவுவடிவழகன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் தமிழ்ச்செல்வம் முன்னிலை வகித்தாா். மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில், இப்பேரூராட்சியில் சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செப்பனிடப்படாமல் சேதமடைந்துள்ள 3,700 மீட்டா் சிமெண்ட் சாலைகளை புதுப்பிப்பது, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் குப்பைகளை தரம் பிரிக்க இடம் தோ்வு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், துணைத் தலைவா் சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். முதல்நிலை எழுத்தா் மாரியப்பன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT