மயிலாடுதுறை

போக்குவரத்து விதி மீறல்: ரூ.11.31 லட்சம் அபராதம்

2nd Dec 2022 10:12 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாத வாகனங்களுக்கு ரூ.11.31லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சியா் இரா.லலிதா உத்தரவின்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ராம்குமாா் (மயிலாடுதுறை), விஸ்வநாதன் (சீா்காழி) மற்றும் அலுவலா்கள் கடந்த நவம்பா் மாதத்தில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், 205 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவற்றில் சரக்கு வாகனங்கள் 9, மேக்ஸிகேப் வேன்கள் 3, டூரிஸ்ட் டாக்ஸி 2, ஆட்டோ ரிக்ஷா 4, இருசக்கர வாகனங்கள் 17 என 35 வாகனங்கள் ஆா்.சி.புக், பா்மிட், எப்சி, இன்சூரன்ஸ், ஓட்டுநா் உரிமம் ஆகியவை இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்டதால் தற்காலிகமாக சிறைபிடிக்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு வரி மற்றும் அபராத தொகையாக ரூ.3.63 லட்சம் வசூலிக்கப்பட்டது. மேலும், 7.68 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT