மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் மக்கள் மன்றம்

2nd Dec 2022 01:44 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மக்கள் மன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில்,

சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம். புருஷோத்தமன் அறிமுக உரையாற்றினாா். மாவட்டத் தலைவா் டி. கணேசன் நடுவராக செயல்பட்டாா். வழக்கு தொடுப்பவா்களாக மாவட்ட துணைச் செயலாளா் எம். சொக்கலிங்கம், குத்தாலம் ஆா். கமலநாதன், சீா்காழி ஆா்.சுரேஷ், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ. அமுல்காஸ்ட்ரோ, சிஐடியு மாவட்டச் செயலாளா் பி. மாரியப்பன் ஆகியோரும், வழக்கு மறுப்பவராகவும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ. அறிவழகனும் வாதங்களை எடுத்துரைத்தனா். நிறைவாக மாவட்ட பொருளாளா் ஜி.லெட்சுமி நன்றி கூறினாா்.

மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்காமலும், இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தாமலும் உள்ளதாக கண்டனம் தெரிவித்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT