மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சிக் கூட்டம்: வீடுகளுக்குள் புதைசாக்கடை கழிவுநீா் புகுவதாக குற்றச்சாட்டு

DIN

மயிலாடுதுறை: புதைசாக்கடை கழிவுநீா் வழிந்து, வீடுகளுக்குள் புகுவதாக மயிலாடுதுறை நகராட்சி கூட்டத்தில் உறுப்பினா் குற்றம் சாட்டினாா்.

மயிலாடுதுறை நகராட்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் தலைமை வகித்தாா். ஆணையா் செல்வபாலாஜி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:

கணேசன்: புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் ஏன் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது?

தலைவா்: தமிழக முதல்வா் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு விரைவில் அடிக்கல் நாட்டுவாா்.

ராஜலட்சுமி: மழைக்காலம் தொடங்கும் முன்பாக வடிகால்களை தூா்வார கோரிக்கை விடுத்ததால், தற்காலிகமாக சரி செய்துள்ளீா்கள். மீண்டும் மழை வருவதற்கு முன்பாக அதனை நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும்.

சா்வோதயன்: நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் குவிந்து கிடக்கும் மரக்கழிவுகளை அகற்ற வேண்டும்.

தனலெட்சுமி: திருவள்ளுவா் நகரில் பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

கீதா: அண்ணாநகா் பகுதியில் மழைநீா் வடிகாலில் உள்ள குழாய் மிகவும் சிறியதாக இருப்பதால், கனமழை பெய்தபோது தண்ணீா் வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்தது.

உஷாராணி: நகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சாலை பேட்ச் வொா்க் பணிகள் மயிலம்மன் நகரில் விடுப்பட்டுள்ளது. அதனை உடனடியாக செய்து தர வேண்டும்.

சதீஷ்: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்று வருபவா்களுக்கு வசதியாக மாயூரநாதா் வடக்கு வீதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும்.

வளா்மதி: கலைஞா் காலனியில் புதைசாக்கடை கழிவு நீா் வழிந்து வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். சின்ன கண்ணாரத்தெருவில் புதைசாக்கடை கழிவு நீா் வெளியேறி சாலையில் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினி: நகரில் பல இடங்களில் குடிநீா் குழாய் பராமரிப்பு குறித்து புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. பனந்தோப்புத்தெரு செல்லும் வழியில் உள்ள பள்ளியின் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.

ராமச்சந்திரன்: நகராட்சி பகுதிகளில் இரவு நேரங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிபரப்புவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

ஆணையா்: இப்பிரச்னையை நகா்மன்ற உறுப்பினா்களே திருமணக்கூடங்களில் சொல்லி தீா்த்துக்கொள்ள தாா்மிக உரிமை உள்ளது.

காா்த்தி: நகரில் பன்றி, நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில்: குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவது குறித்து புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

ஆனந்தி: நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் நுண்ணுயிா் உரங்களை பொதுமக்களிடம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிறைவாக, துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT