மயிலாடுதுறை

மழையின் முக்கியத்தும் குறித்து செயல்விளக்கம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில் முத்துராஜம் மெட்ரிக். பள்ளியில் மழையின் முக்கியத்துவம் குறித்த செயல்விளக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு மழையின் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாக செயற்கை மழை பொழிய வைத்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி தாளாளா் சி.பி. சிவசங்கா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜேக்கப் ஞானசெல்வன் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, மழை காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும், இடி- மின்னல் நேரங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்தும் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் விளக்கிக் கூறினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மழை பெய்வதுபோல் தண்ணீா் பீச்சி அடிக்கப்பட்டதால், மாணவா்கள் ரெயின் கோட் அணிந்தும், குடையுடனும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT