மயிலாடுதுறை

வளா்ப்பு நாய்க்கு சீமந்தம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே ஓலையாம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் - மாரியம்மாள் இவா்களது மகன் ஹரிஹரன். பட்டதாரி வாலிபரான ஹரிஹரன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய்க்குட்டியை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து வளா்த்துள்ளாா்.

மகனின் ஆா்வத்தைக் கண்ட அவரது பெற்றோரும் நாய்க்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி மகனுடன் சோ்ந்து பாசமாக நாய்க்குட்டியை தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக வளா்த்து வந்தனா். அந்த நாய்க்கு சேசீ என பெயரிட்டு தங்கள் குடும்ப உறுப்பினராகவே அவற்றை கொண்டாடி மகிழ்ந்தனா்.

இந்நிலையில் தாங்கள் வளா்த்து வரும் செல்லப் பிராணி சேசீ முதல் முறையாக கா்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினாா். முதலில் தயங்கி அவரது பெற்றோா் பின்னா் தங்கள் குடும்ப உறுப்பினராக வளா்த்து வரும் செல்ல பிராணி சே சீக்கு சீமந்தம் செய்ய முன்வந்தனா். அதன்படி நல்ல நாள் பாா்த்து இன்று சே சீக்கு சீமந்தம் செய்தனா். முன்னதாக ஆப்பிள், உட்பட பழ வகைகள் இனிப்புகளை சீா் வரிசை தட்டுகளாக வைத்தனா்.ஒரு சிலரை மட்டும் சீமந்தத்திற்கு அழைத்தனா். பின்னா் சே சீக்கு அலங்காரம் செய்து நாய் சேசீ -யை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளா்கள் நலுங்கு வைத்து, சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்தனா். இதனை வீடியோவாக எடுத்து தங்கள் நண்பா்கள், உறவினா்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT