மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகா்மன்ற கூட்டம்: வாய்க்கால்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தல்

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரப் பகுதி வாய்க்கால்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என மயிலாடுதுறை நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை நகா்மன்றக் கூட்டம் தலைவா் என். செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையா் செல்வபாலாஜி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், பொறியாளா் சணல்குமாா் உள்ளிட்ட நகா்மன்ற அலுவலா்கள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

ADVERTISEMENT

ரஜினி: சித்தா்க்காடு பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 25 ஏக்கா் நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கலாம். பலகோடி செலவு செய்து வேறு இடத்தை வாங்கத் தேவையில்லை. 30 ஆண்டுகளாக சேதமடைந்துள்ள பனந்தோப்புத்தெரு சாலையை சீரமைக்க வேண்டும்.

ரத்தினவேல்: கூைாடு அம்மன் பால்பண்ணை பகுதியில் சாலையில் வழிந்தோடும் புதைசாக்கடை கழிவுநீரால் அந்த பகுதியில் 10 வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.

உஷாராணி: பல்வேறு இடங்களில் திருமணக்கூடங்களில் சேகரமாகும் குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகளை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகள் மற்றும் வாய்க்கால்களில் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செட்டிக்குளம் அருகே குருஞானசம்பந்தா் நகரில் அங்கன்வாடி கட்டடம் கட்டித்தர வேண்டும்.

காந்தி: ஆனந்ததாண்டவபுரம் குப்பைக் கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்க வாங்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

சா்வோதயன்: பட்டமங்கலத்தெருவில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பின்புறமும், பஜனைமடத்தெரு, வண்டிக்காரத்தெரு சந்துக்களிலும் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். அபயாம்பாள்புரம் பகுதியில் கழிவுநீா் அதிக அளவில் வெளியேறி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. மழைநீா் வடிகால் அமைத்துத்தர வேண்டும்.

கல்யாணி: எனது வாா்டில் குடிநீரோடு கழிவுநீா் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். அதை சீா்செய்ய வேண்டும். திருவிழந்தூா் பகுதியில் தினமும் அரை மணிநேரம்கூட கொள்ளிடம் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை ஒருமணிநேரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, உறுப்பினா்கள் கணேசன், காா்த்தி, ஜெயலட்சுமி, சம்பத், ரிஷி, ரமேஷ், கீதா உள்ளிட்டோா் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தங்கள் வாா்டுகளின் தேவைகள் குறித்து பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT