மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சியில் வியாழக்கிழமை (செப்.1) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை நகராட்சி குடிநீா் திட்டத்தின்கீழ் முடிகண்டநல்லூா் கொள்ளிடம் தலைமை குடிநீரேற்று நிலையத்தில் இருந்து இந்நகராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் பிரதான குழாய்களில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. எனவே, மயிலாடுதுறை நகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT