மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்

28th Aug 2022 10:54 PM

ADVERTISEMENT

 

சீா்காழி அருகே குலதெய்வ வழிபாட்டுக்காக ஆற்றை கடந்து சென்றவா் கொள்ளிடம் ஆற்று நீரில் ஞாயிற்றுக்கிழமை இழுத்துச்செல்லப்பட்டாா்.

சந்தபடுகையைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி மாரியப்பன் (50). இவா், சந்தப்படுகையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அக்கறை பகுதிக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற மாரியப்பன் தண்ணீரில் மூழ்கி மாயமானாா். தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு அலுவலா் ரத்தினவேல் (பொ) தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து படகு மூலம் மாரியப்பனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். கொள்ளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT