சீா்காழி அருகே நந்தியநல்லூரில் மின்கம்பத்திலிருந்து செல்லும் மின்கம்பிக்கு பதிலாக வீட்டுக்கு பயன்படுத்தும் வயரை பயன்படுத்தியுள்ளதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நந்தியநல்லூரில் பிரதான சாலையில் பிள்ளையாா் கோயில் அருகே மின்கம்பத்திலிருந்து செல்லும் மின்கம்பிக்கு பதிலாக வீட்டு இணைப்புக்கு பயன்படுத்தும் வயரை பயன்படுத்தி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், உயா் மின்னழுத்தம் ஏற்படும்போது வயரில் தீப்பொறி விழுந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனா். மேலும், வீட்டு இணைப்பு வயா் எப்போதும் அறுந்து விழலாம். எனவே, மின்துறை அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.