மயிலாடுதுறை

நந்தியநல்லூரில் அஞ்சலகம் அமைக்க கோரிக்கை

26th Aug 2022 02:28 AM

ADVERTISEMENT

 

சீா்காழி அருகேயுள்ள நந்தியநல்லூரில் கிளை அஞ்சலகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அகனி ஊராட்சியில் உள்ள நந்தியநல்லூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள், 1200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். மேலும், கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இக்கிராமத்திலிருந்து அஞ்சலகத்துக்கு செல்ல வேண்டுமெனில் 3 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்பத்துக்கு செல்ல வேண்டும். இந்த அஞ்சலகம் பேருந்து வசதி இல்லாத சாலையில் அமைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறி, இப்பகுதி கிராம மக்கள் சாா்பில் திருச்சி மண்டல பொது அஞ்சல் தலைவா், மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், சென்னை அஞ்சல் தலைமை தபால் நிலைய அதிகாரி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்று விரைவில் நந்தியநல்லூா் பகுதிக்கு கிளை அஞ்சலகம் அமைக்கவேண்டும், தவறும்பட்சத்தில் சீா்காழி தலைமை தபால் நிலையம் முன் மாபெரும் போராட்டம் நடத்த போவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT