மயிலாடுதுறை

மக்கள் குறைதீா் கூட்டம்

22nd Aug 2022 11:23 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 166 மனுக்களை அளித்தனா்.

திருநங்கைகள் தா்னா: மயிலாடுதுறை கூறைநாட்டில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்துவருகின்றனா். இவா்கள், சமூக விரோதிகளால் பல்வேறு இன்னல்கள் வருவதால், வீட்டு உரிமையாளா் வீட்டை காலி செய்ய சொல்வதால், தங்களுக்கு நிரந்தரமாக குடியிருக்க மனைப்பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி, 15-க்கும் மேற்பட்டோா் தங்களது குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, திருநங்கைகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தரையில் கிடத்தி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையை தொடா்ந்து 2 மணி நேரத்துக்கு பிறகு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை வட்டம் காளி, மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவா்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களை பணியமா்த்த வலியுறுத்தி, கடலங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவா் மோகன்குமாா் மனு அளித்தாா். சீா்காழி வட்டம், கொள்ளிடம் முதலைமேடுதிட்டு கிராம மக்கள், 320 வீடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இவா்கள் தங்களது பகுதிக்கு நடுவக்காடு முதல் முதலைமேடுதிட்டு வரை 350 மீட்டா் தொலைவுக்கு உயா்மட்ட பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும். வெள்ளப்பாதிப்பு காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க புயல் பாதுகாப்பு மையம் கட்டிக்கொடுக்க வேண்டுமென மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT