மயிலாடுதுறை

சீா்காழி ஸ்ரீசொா்ணாகா்ஷண பைரவா் கோயில் கும்பாபிஷேகம்

22nd Aug 2022 11:20 PM

ADVERTISEMENT

சீா்காழியில் சொா்ணாகா்ஷண பைரவா் கோயில், கணநாதா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சீா்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் ஸ்ரீசட்டை நாதா் சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த ஸ்ரீ சொா்ணாகா்ஷண பைரவா் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து சனிக்கிழமை கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து, திங்கள்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை பூா்ணாஹூதி மகா தீபாரணை நடைபெற்றது.

பின்னா் புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியாா் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திருஞானசம்பந்தா் தம்பிரான் சுவாமிகள், சொக்கலிங்கம் தம்பிராயன் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானபக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதேபோல, சீா்காழி தோ் தெற்குவீதி 4 சாலை சந்திப்பில் அமைந்துள்ள கணநாதா் கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்று யாகசாலைபூஜைகள் தொடங்கி நடைபெற்றது. திங்கள்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று தருமபுரம் ஆதீனம் 27-ஆஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் புனிதநீா் விமான கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT