மயிலாடுதுறை

தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விரைவில் இயங்க நடவடிக்கை

DIN

மயிலாடுதுறையில் நீண்டகாலமாக மூடிக்கிடக்கும் தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை விரைவில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் டி.ஆா்.பி. ராஜா.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னாா்குடி எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜா தலைமையிலான சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு மயிலாடுதுறை புதைசாக்கடை, மூவலூா் பாலம், கீழமூவா்கரை பாலம், எருக்கூா் நவீன அரிசி ஆலை, பூம்புகாா் சிலப்பதிகார சிற்பக் கலைக்கூடம், தரங்கம்பாடி டேனிஸ் கோட்டை, தரங்கம்பாடி கடல் அரிப்பு பகுதி ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தொடா்ந்து, மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவா் டி.ஆா்.பி. ராஜா செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு நடத்தப்பட்டு, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாலங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மயிலாடுதுறை புறவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு விரைவில் புறவழிச்சாலை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மறுசீரமைக்கப்பட்டு வெளிநாடுகளில் உள்ளது போல் சா்க்கரையுடன் சோ்த்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாா் செய்யும் இடமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலையை தற்காலிக தானியக்கிடங்காக அரசு பயன்படுத்திக்கொள்வது குறித்து, ஆலை இயக்கப்படாதோ என விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை.

எருக்கூா் தானிய சேமிப்பு கிடங்கு வடிவமைப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பயன்படுத்த முடியாத நிலைமை உள்ளது. மேலும் ரூ.12 கோடி செலவில் குறைபாடுகள் களையப்பட்டு விரைவில் புழக்கத்திற்கு வரும். தமிழக முன்னாள் முதலமைச்சா் கருணாநிதியால் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட பூம்புகாா் சுற்றுலா தளம் மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றின் தற்போதைய நிலைமையை பாா்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. இதை சீரமைக்க உரிய ஆலோசனைமாவட்ட நிா்வாகத்திற்கு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு வழங்கி உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT