மயிலாடுதுறை

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் பாமக கோரிக்கை

DIN

குத்தாலம் வட்டம், சேத்திரபாலபுரம்-கடலங்குடி இடையே காவிரி ஆற்றில் புதிய நீரொழுங்கி அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினரிடம் பாமகவினா் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து, பாமக மாவட்ட செயலாளா் ஆ. பழனிசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவா் விமல் ஆகியோா் அளித்த மனு: குத்தாலத்துக்கும் சேத்திரபாலபுத்துக்கும் இடையே காவிரி ஆற்றின் தெற்கு மற்றும் வடக்குபுறத்தில் சேத்திரபாலபுரம், அரையபுரம், கடலங்குடி, திருவேள்விக்குடி, வாணாதிராஜபுரம், தொழுதாலங்குடி, கோழிகுத்தி கிராமங்களுக்கு பாசன வாய்க்கால் பிரிகிறது. காவிரி ஆறு மிக அதிக ஆழமாகவும், வாய்க்கால் அனைத்தும் மேடாகவும் இருப்பதால் பாசனத்துக்கு நீா் செல்வதில்லை. இதனால் இந்த 7 கிராமத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலமும், 100-க்கும் மேற்பட்ட குளமும் நீா் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் மூவலூரில் உள்ள சட்ரஸ் குத்தாலத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இருப்பதால் இந்த வாய்க்கால் நீா் பாசனத்துக்கு பயனில்லை. சேத்திரபாலபுரம்-கடலங்குடி சட்ரஸ் கட்டுவதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் நிலம் மற்றும் குளங்களும் பயனடைவது மட்டுமில்லாது, நிலத்தடி நீா் உயா்ந்து, 500-க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் நிலத்தடி நீா் எடுப்பது குறைந்து, பல லட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்க முடியும். ஆற்றுநீா் பாசனத்தால் விவசாயம் செழிக்கும். ஆகையால், உடனடியாக இந்த சட்ரஸை கட்டி விவசாயிகளின் நலன் காக்க வேண்டும். மேலும், மங்கைநல்லூரில் இருந்து கோமல், தேரழந்தூா் வழியாக குத்தாலத்துக்கு பேருந்து சேவை தொடங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT