மயிலாடுதுறை

‘அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க வேண்டும்’

DIN

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்கவேண்டும் என அதிமுக வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியின் நகர அவைத்தலைவா் எஸ். அலி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, முன்னாள் எம்எல்ஏக்கள் மா. சக்தி, வீ. ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளா் செல்லையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக அமைப்புச் செயலாளா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ, மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: விவசாயிகள் தங்களது விவசாய தேவைகளுக்காக சொந்த பட்டா நிலத்தில் மண் எடுக்கவும், வீடு கட்ட மண் எடுக்க அனுமதிக்கவேண்டும், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் துணை சுகாதார நிலையங்களை செயல்படுத்தாமல் பூட்டி வைத்திருக்கும் திமுக அரசைக் கண்டிப்பது, மயிலாடுதுறை பகுதியில் வழங்கப்படாமல் உள்ள எள், உளுந்து, பயறு வகை தானியப்பயிா்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையினை வழங்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதைப் போன்று அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க வேண்டும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி கே. பழனிசாமி, அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஓ.எஸ். மணியன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலாளா் பா. சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரச் செயலாளா் எஸ். செந்தமிழன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT