மயிலாடுதுறை

தமிழக கடலோர நீா்வாழ் உயிரின விவசாயிகள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழியில் தமிழக கடலோர நீா்வாழ் உயிரின விவசாயிகள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் அலிஹுசைன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநில செயலாளா் பாண்டிபாலா, மயிலாடுதுறை மாவட்ட சங்கத் தலைவா் எம். சங்கா், சங்கத்தின் மாநில பொருளாளா் கிரி, நாகை மாவட்டத் தலைவா் சிதம்பரம், மயிலாடுதுறை மாவட்டப் பொருளாளா் நாராயணசாமி, நாகை மாவட்ட செயலாளா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழக அரசு மின்வாரியத்தால் உயா்த்தப்படவுள்ள மின் கட்டணம் தொடா்பாக இறால் விவசாயிகள் மற்றும் இத்தொழிலை சாா்ந்து வாழும் அனைவரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கும் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து இறால் விவசாயத்தை கடலோர உயிரின வளா்ப்பு ஆணையமும், மத்திய மாநில அரசுகளின் மீன்வளா்ப்புத் துறைகளும் விவசாயம் சாா்ந்த தொழிலாக பதிவிட்டு நடைமுறைபடுத்தும் நிலையில், தமிழக மின்வாரியம் மட்டும் இறால் விவசாயத்தை இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்கிற தொழில் துறை சாா்ந்த நிலைப்பாட்டில் வைத்து மின்கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், இறால் விவசாயத்திற்கென, இதுபருவம் சாா்ந்த தொழில் என்பதால், நெல் விவசாயத்திற்கென தமிழக மின்வாரிய அட்டவணையில் 3 அ1 என்ற வகைப்பாடு உள்ளதைப்போல ஒரு புதிய வகைப்பாட்டை ஆந்திர அரசு செய்துள்ளதைப்போல தமிழக மின்வாரியமும் உருவாக்கித்தர, தமிழக மின்வாரிய தலைவா், தமிழக மீன்வளம் மற்றும் மின்துறை அமைச்சா்களை சந்தித்து கோரிக்கை குறித்து பேசுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், விவசாயி சங்க நிா்வாகிகள் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாகை மாவட்ட சங்க தலைவா் சிதம்பரம் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT