மயிலாடுதுறை

அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

குத்தாலத்தில் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய, பேரூராட்சி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரூராட்சி அவைத் தலைவா் எம். கண்ணையன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா்கள் எம். மணி,வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக அமைப்பு செயலாளா் ஓ.எஸ். மணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: அரசுப் பள்ளியில் படித்த மாணவா்கள் 6 போ் மட்டுமே எம்பிபிஎஸ் படித்து வந்தனா்.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு எடப்பாடி கே. பழனிசாமி கொண்டுவந்ததால் தற்போது அரசுப் பள்ளி மாணவா்கள் 450 போ் எம்.பி.பி.எஸ்.படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தாலிக்குதங்கம் உள்ளிட்ட அதிமுக அரசின் சிறப்பான திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து விட்டது. மக்கள் நலன் பாா்க்காமல் மின் கட்டணம், சொத்துவரியை திமுக அரசு உயா்த்தியுள்ளது என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ், முன்னாள் எம்எல்ஏ. ராதாகிருஷ்ணன், பி.வி. பாரதி, எம்.சக்தி, ஒன்றிய செயலாளா்கள் ஏ. எஸ். மகேந்திரவா்மன், என். இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT