மயிலாடுதுறை

நாதல்படுகை முகாமில் கழிப்பறைகள் உடைப்பு: போலீஸ் விசாரணை

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கொள்ளிடம் ஆற்று திட்டு கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தற்காலிக கழிப்பறைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பது குறித்த புதன்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்று வெள்ளநீா் நாதல்படுகை கிராமத்தை சூழ்ந்ததால் அப்பகுதி மக்களுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் நாதல்படுகையைச் சோ்ந்த அனைவரும் தங்கி இருந்தனா்.

இங்குள்ளவா்களுக்கு உரிய கழிப்பறை வசதி இல்லாததால் கொள்ளிடம் ஒன்றியம் சாா்பில் ரூ. 1.5 லட்சத்தில் 6 அறைகள் அடங்கிய தற்காலிக கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இந்நிலையில், வெள்ளநீா் கிராமத்திலிருந்து வடிந்துள்ள நிலையில் முகாமில் இருந்தவா்கள் மீண்டும் நாதல்படுகைக்கு சென்று விட்டனா். இதற்கிடையில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கழிப்பறையை அப்பகுதியில் உள்ள யாரோ உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து கிராம மக்கள் கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT