மயிலாடுதுறை

தொல்.திருமாவளவன் பிறந்தநாள்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி, மயிலாடுதுறையில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு நலஉதவிகளை புதன்கிழமை வழங்கினா்.

தொல்.திருமாவளவனின் 60-ஆவது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில் கட்சியின் ஒன்றிய செயலாளா் கனிவளவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பாளா் அன்புச்செல்வன், ஒன்றிய பொறுப்பாளா் பெருவழுதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளையும், பொதுமக்களுக்கு மா, பலா, தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT