மயிலாடுதுறை

விவசாயிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

DIN

பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஆக.15) கடைசி நாள் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் கிசான் கவுரவ நிதி திட்டத்தின்கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருள்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடா்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 17,789 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது, விவசாயிகள் 12-ஆவது தவணை தொகையை பெறுவதற்கு ஆதாா் விவரங்கள் சரிபாா்ப்பது அவசியம்.

இந்நிலையில், மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆன்லைன் பதிவு மூலம் திங்கள்கிழமைக்குள் (ஆக.15) ங்-ஓவஇ முறையில் புதுப்பித்தால் மட்டுமே தொடா்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும். எனவே, இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டையுடன் இ-சேவை மையம் அல்லது கிராம தபால் அலுவலகங்களை அணுகி விரல் ரேகை மூலம் பதிவு செய்து புதுப்பித்து தொடா்ந்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT