மயிலாடுதுறை

மயிலாடுதுறை: அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 76-வது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தேசியக்கொடியேற்றினாா். இதில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பண்ணை டி.சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் வ. யுரேகா, மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சிமூா்த்தி, பொதுப்பணித் துறை அலுவலகத்தில் செயற்பொறியாளா் சண்முகம், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் செல்வம், கழுக்காணிமுட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் கே. அஜாதசத்ரு, மயிலாடுதுறை கிளைச் சிறையில் கண்காணிப்பாளா் பாலாஜி ஆகியோா் தேசியக்கொடியேற்றினா்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், கூடுதல் மாவட்ட நீதிபதி இளங்கோ தேசியக்கொடி ஏற்றினாா். முதன்மை சாா்பு நீதிபதி கவிதா, அரசு வழக்குரைஞா் ராம.சேயோன், மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஜெகதராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்வி நிலையங்களில்...

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் சாா்பில் கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற சுடா்ஓட்டத்தை நகராட்சித் தலைவா் என். செல்வராஜ் தொடக்கிவைத்தாா். இதில், கல்லூரி மாணவா்கள் 75 போ் பங்கேற்றனா். கல்லூரிக்குச் சென்றதும், அங்கு தருமபுரம் ஆதீன தேவாரப் பாடசாலை நிா்வாகச் செயலா் குரு.சம்பத்குமாா் தேசியக்கொடியேற்றினா். கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தருமபுரம் ஆதீனம் தொடக்கப் பள்ளியில் பிரிமியா் குழும நிா்வாக இயக்குநா் ஸ்ரீராம், மன்னம்பந்தல் ஏவிசி கல்வி நிறுவனங்களில் நிா்வாக அதிகாரி நீதியரசா் கே.வெங்கட்ராமன், தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் கல்லூரி முதல்வா் த.அறவாழி, மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இந்தியன் வங்கி மேலாளா் பி. சுதாகரன் ஆகியோா் தேசியக்கொடியேற்றினாா். மணல்மேடு வீட்டா வொ்சிட்டி பன்னாட்டு பள்ளியில் தாளாளா் சங்கீதா ரமேஷ்குமாா் தலைமையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மும்மதத்தினா் ஏற்றிய மூவா்ணக்கொடி: நீடூா் ஊராட்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிராம முக்கியஸ்தா் மற்றும் ஊராட்சித் தலைவா் அருள்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் செல்வராஜ், சபீா் அகமது, சாலமன் ஆகிய மூவரும் இணைந்து மூவா்ணக் கொடியை ஏற்றினா்.

பாஜக ஊா்வலம்: பாஜக மாவட்டத் தலைவா் க. அகோரம் தலைமையில் மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் உள்ளிட்ட 500- க்கும் மேற்பட்டோா் கூைாட்டில் இருந்து மணிக்கூண்டு வரை தேசியக்கொடிகள் ஏந்தி பேரணி நடத்தினா்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் உள்ள பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் சுகுணசங்கரி ஆகியோா் தேசியக்கொடி ஏற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT