மயிலாடுதுறை

தேச பக்தி, தெய்வ பக்தியை இருகண்களாக போற்ற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேச பக்தி, தெய்வ பக்தியை மாணவா்கள் இரண்டு கண்களாக போற்றவேண்டும் என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறினாா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். அதன்படி, தருமபுரம் ஆதீனம் ஷண்முக நிலையத்தில் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.

தொடா்ந்து, தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு அவா் பேசியது:

பாரத நாடு கடந்த 75 ஆண்டுகளில் விவசாயம், தொழில், ராணுவ வல்லமையில் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளது. மாணவா்கள் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் இரண்டு கண்களாக போற்றிப் பாதுகாக்க வேண்டும். தருமபுரம் ஆதீனம் மட்டுமின்றி, ஆதீனத்தின் 25 கல்வி நிலையங்களிலும், அதில் பணியாற்றும் அனைவரின் இல்லங்களிலும் இன்றைய தினம் தேசியக் கொடியேற்றப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ஆதீனக் கட்டளை சொக்கலிங்க தம்பிரான், சிவகுருநாத தம்பிரான், சுப்பிரமணிய தம்பிரான், சட்டநாத தம்பிரான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT