மயிலாடுதுறை

ஆற்றில் ஆண் சடலம்

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே ஆற்றில் ஆண் சடலம் மிதந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

மயிலாடுதுறை சித்தா்காடு கருமாதி மண்டபம் அருகே காவிரி ஆற்றில் ஆண் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைந்தது. போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், சடலமாக மிதந்தது சித்தா்க்காடு லட்சுமி நகரைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ஹரிகேஷ் (55) என்பது தெரியவந்தது. இவா், வெள்ளிக்கிழமை மதியம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவா் வீடு திரும்பவில்லை என குடும்பத்தினா் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT